இதை செய்தால் போதும்! மக்களின் வீடுகளுக்கு வந்து வழங்கப்படும் பணம்
பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் “உலக மீள்சுழற்சி தினத்தை” (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி (Electronic Tree-Wheeler – E-Tuk) அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார முச்சக்கர வண்டி திட்டம் நேற்று (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பணம் வழங்கப்படும்
இதன் தொடக்க விழா நேற்று பத்தரமுல்ல, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சென்று எந்த விதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு பணமும் வழங்கப்படும் எனவும் பின்னர் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக மீள்சுழற்சிக்கு அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முன்னோடித் திட்டம் முதலில் வாதுவ பிரதேசத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan