சோதனைச்சாவடிகளில் கோவிட் தடுப்பூசியை பெற்ற அட்டையை பரிசோதிக்க நடவடிக்கை
மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் எதிர்வரும் புதன்கிழமை 15ம் திகதி தொடக்கம் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட அட்டை பரிசோதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முடிவுக்கு வருகின்ற நிலையில் உள்ளது. இதன் அடிப்படையில் இது வரையில் 71,396 பேர் முதலாவது கோவிட் தடுப்பூசியையும் , 56,363 பேர் இரண்டாவது தடுப்பூசியும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
முதலாவது தடுப்பூசியை 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் 30 சதவீதமாகவும், 2வது தடுப்பூசியை 68 சதவீதமானவர்களும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை கடந்த வாரம் முதல் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் கடமையாற்றுகின்ற 29 மற்றும் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையாக 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கான கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.
அத்தோடு விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான வேலைத்திட்டத்தின் ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளும், தரவுகள் சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த இரு நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 101 பேர் கோவிட் தொற்றுடன் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 66 பேர் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமானவர்கள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து தற்போது வரை 1966 கோவிட் தொற்றாளர்களும், இவ்வருடம் மாத்திரம் 1949 தொற்றாளர்களும், இந்த மாதம் 282 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய 1613 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் கடைசியாக நேற்று 63 வயதுடைய ஆண் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை 30 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத அனைவருக்கும் இன்றும் நாளையும் ஆகிய இரு தினங்கள் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று புதுக்குடியிருப்பு முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் நாளை கட்டையடம்பன் மகா வித்தியாலயத்தில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். எதிர் வரும் புதன்கிழமை 15 ஆம் திகதியிலிருந்து சோதனைச் சாவடிகளில் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட அட்டை பரிசோதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
30 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டால் அவர்களை இடை நிலை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்ட சகலரும், உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரியை நாடி இன்றும் நாளையும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam