அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்களை நியமிக்க நடவடிக்கை
அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் நிறுவப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை செயல்படுத்துவதற்கான சுற்றறிக்கையை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
"Clean Sri Lanka" திட்டத்திற்கு இணங்க இந்த பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் செயல்படவுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பு குழு
அவர் மேலும் தெரிவிக்கையில், "Clean Sri Lanka" திட்டத்திற்காக நாங்கள் கிராமத்தில் குழுவை உருவாக்குகிறோம். அந்த கிராமக் குழுவிற்கான ஒதுக்கப்பட்ட பணிகள் தொடர்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்படும். பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை கிராமத்தில் நிறுவுகிறோம்.
பெரிய பெரிய பிரச்சினைகள் உள்ளன. அவற்றை மதிப்பாய்வு செய்வதற்காகவே நாங்கள் இந்த குழுவை நிறுவுகிறோம். கிராம சேவகரும் பிரதேச செயலாளரும் இதனை வழிநடத்துவார்கள்.
ஒரு மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார். இதற்கான செயற்குழு ஒன்றை நியமிப்போம். கிராமத்தில் அமைதியைப் பேணுவதற்கு நாங்கள் ஒரு தனி குழுவை நியமிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |