இலங்கையில் சமையல் எரிவாயுவை தடையின்றி விநியோகிக்க அரசு அதிரடி நடவடிக்கை
நாட்டில் எரிவாயு விநியோகத்தை தடையின்றி விநியோகிப்பதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக பாரம்பரிய விநியோகப் பாதைகளில் ஏற்பட்ட இடையூறுகள் இருந்தபோதிலும், தடையின்றி எரிவாயு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுவிஸ் நிறுவனமான Geo Gas Trading SA உடன் இணைந்து அமெரிக்காவில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிவாயு கப்பல்கள்
இந்த புதிய திட்டத்தின் கீழ், எரிவாயு கப்பல்கள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் நாட்டிற்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளன.

விநியோகப் பாதையின் தொலைதூர இருப்பிடம் காரணமாக போக்குவரத்துச் செலவுகள் ஓரளவிற்கு அதிகரிக்கக்கூடும்.
எனினும், நுகர்வோருக்கு எரிவாயுவை எந்தவிதப் பற்றாக்குறையுமின்றி வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
எரிசக்தித் தேவைகள்
போர் பதற்றம் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் எரிசக்தித் தேவைகள் தொடர்ந்து பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri