அரசுடமையாக்கப்படும் நிலங்கள்:எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
பயிரிடப்படாத நிலங்களை அரசுடமையாக்குவதற்கான சட்டவரைவுகள் மற்றும் கட்டளைச் சட்டம் என்பவற்றில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(16.12.2022) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கமைய, சட்டவரைவுகள் மற்றும் கட்டளைச் சட்டம் என்பவற்றில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
தற்போது கொழும்பில் தமது சொந்த நிலங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளாமல் உள்ள நிலங்கள் அரசுடமையாக்கப்படவுள்ளன.
இவ்வாறு அரசுடமையாக்கப்படும் நிலங்கள் குறித்த பிரதேசங்களில் உள்ள இளைஞர்களுக்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ள வழங்கப்படவுள்ளது.
அடுத்த போகத்தின்போது, குறிப்பிடத்தக்க அளவு நிலத்தை அரசுடமையாக்கப்பட்டு இளைஞர்களுக்கு பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
இதேவேளை இதுவரையில் சுமார் ஒரு இலட்சம் ஏக்கர் வயல் நிலங்கள் பயிரிடப்படாதுள்ளது.”என கூறியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 5 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
