வெளிநாடு ஒன்றில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு சிக்கல்
தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த வீசா காலத்தின் முடிவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் தகவல்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வீசா காலம்
வீசா காலம் நிறைவடைந்தோர் சட்டவிரோமான முறையில் வெளிநாடுகளில் தங்கியிருக்க வேண்டாம் என தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்கொரியாவில் பணிக்காக செல்லும் மற்றுமொரு குழுவினருக்கு இன்று விமான சீட்டுகள் வழங்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பணியகத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் முதன்முறையாக தென் கொரியாவில் பணியாற்றுவதற்காக 95 பேர் கொண்ட குழுவினர் செல்லவுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இந்நிலையில் இந்தாண்டில் சுமார் 8,000 இலங்கையர்களுக்கு தென் கொரிய தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் இருந்து திறமையான பணியாளர்களை கொரியாவுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
