“மனோ கணேசன் என்னை ஏன் உற்றுப் பார்க்கின்றார்”! கொழும்பில் ரணில் வழங்கிய பதில் (Photos)
இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிரச்சினை இருப்பதன் காரணமாகவே அவரவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் நாம் அனைவரையும் ஒன்றாக இணைத்துப் பேச்சு நடத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்களைத் தனித்தனியாக அழைத்துப் பேச்சை முன்னெடுக்கின்றோம், எனவே பிரச்சினைகளைக் கட்டம் கட்டமாகத் தீர்ப்போம், அப்போதுதான் 75ஆவது ஆண்டு சுதந்திர தின நிகழ்வின் போது நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழும் நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்படத்தில் நேற்று நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து சமயங்களிலும் பிரச்சினைகள்
மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு சமயமும் தனது சமயத்தைப் பற்றி அனைவருக்கும் போதிக்க வேண்டும். ஆஸ்திகனுக்கும் நாஸ்திகனுக்கும் போதிப்பதால் அவர்கள் எந்தவொரு சமயத்தினதும் எதிரிகள் ஆகிவிட மாட்டார்கள். சமயங்களும் பாரிய பிணக்குகளுக்கு முகம் கொடுத்துச் செல்கின்றன.
எதிர்காலம் என்றால் என்ன என்பது தொடர்பில் இஸ்லாத்திலும் பாரிய விவாதங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன. ஏனைய சமயங்களிலும் இந்நிலைமை காணப்படுகிறது. நீங்கள் கத்தோலிக்க தேவாலயங்களை எடுத்துப் பார்த்தால் அங்கே அருட்தந்தையின் போதனைகள் கத்தோலிக்க தேவாலயத்திலுள்ள பழமைவாத உறுப்பினர்களால் பெரிதும் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இங்கிலாந்திலுள்ள தேவாலயங்களில் தற்போது ஆண் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரிப்பதா, அதனை எவ்வாறு நடத்துவது போன்ற விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அனைத்து சமயங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. அது இந்து சமயமாக இருந்தாலும் சரி பௌத்த சமயமாக இருந்தாலும் சரி.
அவை என்ன என்பது பற்றியே நாம் கலந்துரையாடி வருகின்றோம். எனவே, நாம் அனைவரும் அதற்கு முகம் கொடுத்துள்ளோம். எனினும், நாம் எமது அடிப்படை கொள்கையிலிருந்து விலகக் கூடாது. இஸ்லாம், பௌத்தம், இந்து மற்றும் கிறிஸ்தவம் ஆகிய சமயங்களைச் சேர்ந்த நம் அனைவரும் எமது சமயத்தின் அடிப்படைகளை தேடும் கொள்கைகளில் குறியாக இருக்க வேண்டும்.
சமயம் வர்த்தக மயப்படுத்தப்பட்டிருப்பதாக நாம் உணருகின்றோம். போர்கள் உருவாகவும் சமயம் காரணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எமது அதிகப்படியான நேரம் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுவதிலேயே கழிந்துள்ளது. எனினும், தற்போது இது நல்லிணக்கத்துக்கான நேரமாகும். எனவேதான் நாம் தமிழர்களுடன் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளோம்.
அதாவது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எவ்வாறு நல்லிணக்கத்துக்குப் பங்களிக்கப் போகின்றார்கள் என்பது பற்றி நாம் ஆராய்ந்தோம். முதற்படி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாம் மீண்டும் கட்சித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம். இந்த கலந்துரையாடல் மூலமாக நாம் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.
மலையகத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகள்
மனோ கணேசன் என்னை ஏன் உற்றுப் பார்க்கின்றார் என்று எனக்குத் தெரியவில்லை. மலையகத் தமிழர்களை சமூகத்துடன் ஒன்றிணைப்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துவோம். அவர்கள் தாமதித்து வந்தாலும் அவர்களையும் சமூகத்துடன் நாம் ஒன்றிணைக்க வேண்டும். எமது சமூகத்தில் காலம் தாமதித்து பல இனங்களும் சமயங்களும் ஒன்றிணைக்கப்பட்டாலும் அவர்கள் அதற்குரிய பலனை அனுபவிக்கவில்லை. எனவே அவர்களும் முழுமையாக ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக முஸ்லிம் இனத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் நான் கலந்துரையாட வேண்டும். 2018 ஆம் ஆண்டின் திகன கலவரம், 2019 ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் என்பன தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படுவதுடன் அதற்குக் காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்பிலும் நாம் பேச வேண்டும்.
கொழும்பு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினையிலும் முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளையே இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள முஸ்லிம்களும் மன்னார் முஸ்லிம்களும் எதிர்நோக்குகின்றனர். இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், சிங்களவர்கள் போன்று இவர்களிடமும் பேச்சு நடத்தி அவர்கள் எதிர்கொண்டுள்ள துன்பங்கள், சமூக பின்னடைவுகள் உள்ளிட்ட விடயங்களை வெளிக்கொணர வேண்டும்.
இது நல்லிணக்கம் தொடர்பான மூன்றாம் கட்ட நடவடிக்கையாக அமையும். அதேபோன்று சிங்களவர்களுடனும் நாம் பேச்சு நடத்தவுள்ளோம். அதிலும் பல குழுக்கள் உள்ளன. சிலர் சாதி அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளனர். மேலும், பலரைச் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. இதுபோன்ற நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே எனக்கு சமூக நீதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டிய தேவையுள்ளது.
எனவே, ஏனைய முஸ்லிம் குழுக்களுடனும் கலந்துரையாடி அவர்களுக்குள்ள பிரச்சினைகளை எமது மூன்றாம் கட்ட சந்திப்பின்போது எமக்கு அறியத்தருமாறு நான் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையைக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் றிஸ்வியினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முத்திரையொன்றும்
வெளியிடப்பட்டதுடன் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார அதனை
ஜனாதிபதியிடம் கையளித்தார்.
சமய தலைவர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, வெளிநாட்டு
உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்
சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க,
நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற)
கமால் குணரத்ன, பாகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட
பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam
