12 நாட்களின் பின் கட்டப்படும் ட்ரம்பின் கைகள்! அமெரிக்காவின் விபரீத முடிவு
இன்னும் 12 நாட்களில் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் முடிவுக்கு வரும் எனவும், ஈரானை தரை வழியாக தாக்க முயன்றால் அமெரிக்கா மீள முடியாத நிலைக்கு தள்ளப்படும் எனவும் பிரித்தானியாவில் வசிக்கும் அரசியல் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் தி. திபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்கா - ஈரான் போர் தொடர்பாக ஈரான் மிக முக்கியமான நுட்பமான உத்தியை கையாண்டுள்ளது. அந்நாட்டின் 12 மாநிலங்களும் தன்னிச்சையாக செயல்படக்கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தரை வழி போரை தொடர்ந்தால், அதன் ஆதிக்க நிலை பாதிக்கப்படக்கூடும். அந்த இடத்தை சீனா கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஈரானியர்கள் போரில் அரசியலை இணைத்து முன்னெடுக்கின்றனர் என்பதால், அவர்கள் எளிதில் வீழ்ச்சியடைய மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக, “ஊடறுப்பு” நிகழ்ச்சி மேலும் ஆழமாக ஆராய்கிறது.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan