வவுனியா மாவட்டத்தில் பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் நிலவரம்
வவுனியாவில் மேலும் 121 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 116 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும்,வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக 5 பேர் இன்று மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக மகாறம்பைக்குளம் பகுதியில் (வயது 77) பெண் ஒருவரும், தவசிகுளம் பகுதியில் (வயது 57) ஆண் ஒருவரும், சிறிநகர் பகுதியில் (வயது 77) பெண் ஒருவரும், பட்டானிச்சூர் பகுதியில் (வயது 44) ஆண் ஒருவரும், தோணிக்கல் பகுதியில் (வயது 74) ஆண் ஒருவரும் என 5 பேர் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்த 5 பேரினது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam
