கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் நிலவரம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 6256 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன், 73 மரணங்களும் பதிவாகியிருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் (Rupavathi Ketheeswaran) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவலை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 6256 பேர் கோவிட் தொற்றறக்கு இலக்காகி இருப்பதாகவும், இதில் தற்போது 537 பேர் சிகிச்சை பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர் .அத்துடன் மாவட்டத்தில் இதுவரை எழுபத்தி மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், முதலாவது தடுப்பூசியினை 61 ஆயிரத்து 894 பேர் பெற்றுள்ளனர்.அதேபோல முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளை 43 ஆயிரத்து 507 பேர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட இருபது தொடக்கம் முப்பது வயதிற்கானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், இதுவரை 107 பேர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri