இலங்கையில் இன்று பதிவாகிய கோவிட் நிலவரம்
நாட்டில் நேற்று 27 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மரணித்தவர்களில் 14 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரழந்தவர்களில் 20 பேர் 60 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் இன்று இதுவரையில் 529 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையின் படி நாட்டில் இதுவரையில் 559, 605 ஆக இருந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 560,134 ஆக உயர்வடைந்துள்ளது.
உலகளாவிய ரீதியாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 கோடியைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri