யாழில் வினோதமான முறையில் தோண்டி எடுக்கப்பட்ட விக்கிரகங்கள் (Photos)
யாழ்.மிருசுவில் மன்னன்குறிச்சியிலுள்ள வீட்டு வளவிலுள்ள நிலத்திலிருந்து 12 சிறிய விக்கிரகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம்(09.04.2023) அதிகாலை இந்த விக்கிரகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
கனவின் மூலம் கண்டெடுக்கப்பட்ட சிலைகள்
முத்தையா பாஸ்கரன் என்ற குடும்பத் தலைவர் தனது வீட்டு வளவில் விக்கிரகங்கள் உள்ளதாக கனவு கண்டுள்ளார்.
அதை அடுத்து அதிகாலை எழுந்து அவ்விடத்தை தோண்டிய போது பித்தளையிலான 12 சிறிய விக்கிரகங்களைக் கண்டுள்ளனர்.
சிவன் விக்கிரகம், சிவலிங்கம், வராகி அம்மன் விக்கிரகம், ஆறுதலை முருகன், சிவனும் பார்வதியும் இடப வாகனத்தில் அமர்ந்திருக்கும் விக்கிரகம், ஒற்றைத்தலை நாகம் ஐந்து, ஐந்து தலை நாகம் இரண்டு ஆகிய விக்கிரகங்களே மீட்க்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து அவ்விடத்தில் கொட்டில் அமைத்து விக்கிரகங்களை வைத்து பிரதேசவாசிகள்
வழிபட்டுவருகிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.












