மீண்டும் நிறுவப்பட்ட டி.ஏ.ராஜபக்சவின் உருவச்சிலை (Video)
இலங்கையில் கடந்த மே மாதம் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் ஏற்பட்ட கலவரமான நிலைமையின் போது தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த டி.ஏ.ராஜபக்சவின் உருவச்சிலை போராட்டகாரர்களால் உடைத்து கீழே சாய்க்கப்பட்டது.
மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்ட சிலை
உடைக்கப்பட்ட அந்த உருவச்சிலை மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு அதே இடத்தில் இன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
டி.ஏ. ராஜபக்சவின் நினைவு தினம் எதிர்வரும் 6 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ளதுடன் அன்றைய தினம் சிலை மீண்டும் திறந்து வைக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நினைவு தினத்தன்று மீண்டும் திறக்கப்படும்-நாமல்
உருவச்சிலையை உடைப்பதற்காக சென்ற திட்டமிட்ட குழுவினருக்கு சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்க வேண்டும் என்பது தனது நம்பிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.
டொன் அல்வின் ராஜபக்ச என்ற இயற்பெயரை கொண்ட டி.ஏ. ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர, சகோதரிகளின் தந்தை என்பதுடன் அவர் அமைச்சராகவும் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.