விபத்துக்குள்ளான இந்திய பயணிகள் கப்பல் : 10இற்கும் மேற்பட்டோர் பலி
இந்திய கடற்படைக்கு சொந்தமான வேகப்படகு (Speedboat), பயணிகள் கப்பலுடன் மோதியதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் கடற்படை வீரரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகப் படகு கட்டுப்பாட்டை இழப்பு
குறித்த விபத்தானது சுற்றுலாப் பயணிகள் எலிபெண்ட் தீவை (Elephanta Island) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இந்தியாவின் மும்பை கடற்கரையில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
பயணிகள் கப்பலில் 110 பேரும், கடற்படை கப்பலில் 5 பேரும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படகில் இருந்த எஞ்சியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதோடு, இயந்திர சோதனையின் போது வேகப் படகு கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |