கியூ.ஆர் குறியீடு தொடர்பில் பொதுமக்களுக்கு எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டையை வேறு யாரும் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

கடும் சட்ட நடவடிக்கை
பதிவு செய்யப்பட்ட QR முறையில் பிரச்சினைகள் காணப்படுமாக இருந்தால், மீள பதிவு செய்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீட்டைப் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும்,போலி QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற முயற்சித்தவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்,அத்தகைய QR குறியீடுகளை அடையாளம் காண தகவல் தொழில்நுட்ப முகவரகத்துடன் (ICTA) இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri