பச்சிலைப்பள்ளியில் மீள்குடியேறியுள்ள 748 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் தேவை உள்ளதாக புள்ளிவிபரம்
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இதுவரை மீள்குடியேறியுள்ள 748 குடும்பங்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை 4632 வரையான குடும்பங்கள் குடியேறியுள்ள இதேவேளை கண்ணிவெடி அகற்றப்படாத பிரதேசங்களாக காணப்படுகின்ற முகமாலை, கிளாலி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறுவதற்காக விண்ணப்பித்துள்ளன.
இந்த நிலையில் ஏற்கனவே மீள்குடியேறி வாழ்ந்து வரும் 4632 குடும்பங்களில் 3665 குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்கள் இதுவரை வழங்கப்பட்டு உள்ளன.
மேலும் 748 குடும்பங்களுக்கான வீடுகள் வழங்க வேண்டிய தேவைப்பாடுகள் காணப்படுவதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட 770 குடும்பங்களுக்கான கிணறுகள், 233 குடும்பங்களுக்கான மலசலகூடங்கள், 1710 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் என்பனவும் தற்போதைய தேவைப்பாடாக காணப்படுவதாக பிரதேச செயலக புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி தற்காலிக வீடுகளில் வாழும் குடும்பங்கள் அண்மையில் பெய்த மழை வெள்ளம் காரணமாக பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
குறிப்பாக 26 வருடங்களின் பின்னர் மீள்குடியேறியுள்ள இந்திரபுரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குடியேறி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் தொடர்ந்தும் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
