பிரான்ஸில் தீவிரமாகும் கோவிட்! சுகாதார அமைச்சர் வெளியிட்ட புள்ளி விபரத்தால் அச்சத்தில் இளைஞர்கள்
உலகின் பல்வேறு நாடுகளில் கோவிட் பரவல் மீண்டும் தீவிரமாகி வருகின்றது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன நாடுகளில் புதிய கோவிட் பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் இறப்பு அதிகமாகி வருகின்றது.
இந்நிலையில்,பிரான்ஸில் கோவிட் தொற்றின் நான்காவது அலை தீவிரமாக பரவி வருவது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலையடுத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது தொடர்பில், பிரான்ஸ் சுகாதார அமைச்சர், Olivier Véran கருத்து தெரிவிக்கையில்,
கடந்த திங்கட் கிழமை மட்டும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரி எண்ணிக்கை 18000 ஆக பதிவாகியுள்ளது.
இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, 150 சதவீதம் அதிகம் ஆகும். இந்த அளவிற்கு கோவிட் தீவிரம் இருக்கும் என்பதை நாங்கள் நினைத்து கூட பார்த்ததில்லை.
எதிர்பார்த்ததை விட தற்போது பரவும் கோவிட் வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக இந்த டெல்டா வைரஸ் இளைஞர்களிடையே அதிகமாக பரவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இது மட்டுமின்றி பிரான்சில் பீட்ட வகை கோவிட் வைரஸ் பரவலும் தீவிரமாகி வருகின்றது.
நேற்று முன் தினம் கோவிட் தொற்றின் நான்காவது அலைக்குள் நுழைந்திருப்பதாக அரசு சார்பில் எச்சரிக்கப்பட்ட நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் கோவிட் பரவல் மிகத் தீவிரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.