பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் மாதாந்த சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்
பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவதனவின் மாதாந்த சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதி வைப்பிலிடுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சில், பிரியந்த குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்கிய சந்தர்ப்பத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரியந்த குமாரவின் உடலை இலங்கைக்கு கொண்டு வந்தமை மற்றும் இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளை அரச நிதியில் ஈடுகட்டவும் அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இந்நிலையில்,அனைத்து செலவுகளையும் உரிய நிறுவனங்களே ஏற்றுக்கொண்டமையினால் மதிப்பீட்டு தொகையை பிரியந்த குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு வழங்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.