பைசர் தடுப்பூசி தொடர்பாக சுகாதர அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை
கோவிட் தடுப்பூசியான பைசர் தடுப்பூசியின் காலாவதியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகதார அமைச்சு நேற்று(23) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கால எல்லை நீடிப்பு
உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்பு என்பவற்றின் அறிவுறுத்தல்களுக்கமைய பைசர் தடுப்பூசியின் காலாவதியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 60-90 செல்சியஸ் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பைசர் தடுப்பூசிகளின் பயன்பாட்டு காலம் ஒன்பது மாதங்களில் இருந்து பன்னிரண்டு மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கோவிட் பரவல்
இலங்கையில் மீண்டும் கோவிட் பரவல் தீவிரமடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தலைதூக்கும் கோவிட் வைரஸ் பரம்பல் |




