மீண்டும் தலைதூக்கும் கோவிட் வைரஸ் பரம்பல்
இலங்கையில் கோவிட் வைரஸ் பரம்பல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளாக சுகாதாரத்துறை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 72 கோவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற முறையில் நடமாடும் மக்கள்
இவர்களில் வெளிநாடு சென்று திரும்பியோர் எவரும் இல்லை என்பதுடன் பெரும்பாலானவர்கள் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
பொது இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதன் ஊடாகவே கோவிட் வைரஸ் பரவல் மீண்டும் தலைதூக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மருத்துவ நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் இதுவரை 6,64,844 கோவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 99 வீதமானவர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
