உலகளவில் வெடிக்கும் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக வெளியான அறிக்கை

Mullaitivu Sri Lankan Peoples Sri Lanka Government
By Erimalai May 09, 2026 09:42 AM GMT
Report

நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தின் முன்னெடுப்பில் உலக அரங்கில் நடைபெறும் கொடிய யுத்த வன்முறைகள் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவும் அதில் கொல்லப்பட்டவர்களுக்கான சர்வ மத பிரார்த்தணையும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு நேற்றைய தினம்(08.05.2026) முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது.

இதன்போது வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுதாவது,

மனிதாபிமானத்திற்கான கூட்டு அறைகூவல் - யுத்தத்தின் நிழலில் மனித மாண்பும் நாடுகளின் வாழ்வாதாரமும் “அமைதியே புனிதமானது” உலகளாவிய வன்முறைகளுக்கு எதிராகவும், பொருளாதார நீதிக்காகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்த சர்வமத பிரார்த்தனையில் பங்கெடுத்த மதத் தலைவர்களின் அறிக்கை தற்போது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ஏக துருவ பேரரசுக் கட்டமைப்பை தக்க வைப்பதற்கான யுத்தம் பல் துருவ பூகோள ழுங்குக்கு எதிராக அந்த நாடுகளின் நிலப்பரப்பு எல்லையைத் தாண்டி ஏனைய நாடுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதை அனைவரும் நினைவுகூர தொடங்கிவிட்டனர்.

ஆட்சி மாற்றத்திற்கான யுத்தமாக அறிவிக்கப்பட்டு தற்போது பல் துருவ உலக ஒழுங்கிற்கான போட்டியாக மாறியுள்ளது.

இவ் வல்லாதிக்கப் போட்டியில் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள். இவை எல்லாமே உலகை பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி தள்ளியுள்ளது.

உலகில் நிலவும் பொருளாதார சிக்கல்கள்

இந்த பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்படுவது மத, இன, நிற வேறுபாடுகளுக்கு அப்பால் சாதாரண மக்களே அழிவுக்குள்ளாகப் போகின்றனர்.

உலகளவில் வெடிக்கும் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக வெளியான அறிக்கை | Statement Issued Against Violent Incidents

குறிப்பாக ஆசிய, தெற்காசிய நாடுகளை வெகுவாகப் பாதிக்கப் போகின்றது. போரில் இறந்த பொதுமக்களை நினைவு கூரும் அதே வேளையில் பாதிக்கப்பட்ட நபர்களையும், குடும்பங்களையும் நினையில் கொண்டு இந்த அறைகூவலை விடுக்கின்றோம்.

இலங்கையின் குறிப்பாக வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்களாகிய நாம் எமது கூட்டுப் பிரார்த்தனைகளையும் ஆழ்ந்த இரங்கலையும் முதற்கண் சமர்ப்பிக்கின்றோம்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை 14ம் லியோ அவர்கள் அண்மையில் தனது திருத்தூதுப் பயணங்களின் போது வெளியிட்ட காத்திரமான கருத்துக்களை நாம் இவ்வேளையில் வழிமொழிகிறோம். யுத்தம் என்பது எப்போதும் ஒரு தோல்வியே எனக் குறிப்பிட்ட அவர் “உலகம் ஒரு சில அடக்குமுறையாளர்களால் சீரழிக்கப்படுறது" என்று பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார்.

ஆயுதங்களுக்காகப் பில்லியன் கணக்கான நிதியைச் செலவிடுவது மனிதாபிமானத்திற்கு இழைக்கப்படும் துரோகம் என அவர் சுட்டிக்காட்டியதை நாம் இன்று இலங்கையின் வட பகுதியில் இருந்து உரக்கச் சொல்கிறோம். அமைதி என்பது வெறும் போர் இல்லாத நிலை மட்டுமல்ல அது மனித இதயங்களில் இருந்து தொடங்கும் ஒரு புனிதமான பயணம் என்பதை அவர் தனது அண்மைய உரைகளில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அகிம்சை வழிப்போராட்டம்

திருத்தந்தையின் இந்த உயரிய மனிதநேயச் சிந்தனையோடு இந்து மற்றும் இஸ்லாமிய அறநெறிகளும் வலுசேர்ப்பதை இங்கு கோடிட்டு காட்ட விரும்புகின்றோம்.

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க என்று ஆசிக்கும் இந்து மதமானது “அகிம்சை பரமோ தர்ம" வன்முறையற்ற தன்மையே மேலான அறம் என்பதற்கிணங்க அனைத்து உயிர்களையும் தன்னுயிர் போல் மதிக்கும் உயரிய மனிதாபிமானத்தையும் இறைவனின் திருவருளை பெறும் வழிகளில் ஒன்று எல்லா உயிர்க்கும் அன்பாயிருத்தல் என்பதையும் நாம் வலியுறுத்துகிறோம்.

இஸ்லாமிய நெறி சொல்வதைப்போல் ஒரு மனிதனை அநியாயமாக மனித சமுதாயத்தையும் கொல்வதற்கு சமன் என்ற போதனைக்கேற்ப அமைதியும் சமாதானமும் மட்டுமே மனித குலத்தைக் காக்கும் என நாம் பறைசாற்றுகிறோம்.

உலகளவில் வெடிக்கும் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக வெளியான அறிக்கை | Statement Issued Against Violent Incidents

2 மூன்றாம் நிலை நாடுகளின் மீதான பொருளாதாரத் தாக்குதல்.

வல்லரசுகளின் இந்த வன்முறைகள் இலங்கை போன்ற வளரும் நாடுகளைப்பொருளாதார ரீதியாகச் சிதைப்பதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். பொருளாதார நெருக்கடி போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு சாதாரண உழைக்கும் மக்களின் தட்டில் இருக்கும் உணவைப் பறிக்கிறது.

திருத்தந்தை அவர்கள் தனது 2026 ஆம் ஆண்டிற்கான உலக அமைதி தினச் செய்தியில் குறிப்பிட்டது போல வன்முறை என்பது மனித மாண்பை (Human Dignity) இழிவுபடுத்துவதாகும்.

போரினால் ஏற்படும் வறுமை, பசி மற்றும் இடப்பெயர்வு என்பன மனிதனை அடிமைப்படுத்துகின்றன. சமூக நீதி - மண்ணுலகில் அமைதி நிலவ வேண்டுமாயின் நாடுகள் ஆயுதங்களுக்குச் செலவிடும் தொகையை வறுமை ஒழிப்புக்கும் மனிதாபிமானத் தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.

மதத் தலைவர்களின் கூட்டுத் தீர்மானம் மதங்கள் போர் புரிவதற்காக அல்ல மாறாக மனிதநேயத்தைப் பாதுகாப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்டன.

இதன்படி,

1. மனிதநேயமே உயர்வு - எமது வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் மனித உயிரின் மேன்மை மற்றும் மாண்பைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் உறுதியாக உள்ளோம்.

2. பேச்சுவார்த்தையே தீர்வு வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலமே நிலையான அமைதியைக் கட்டியெழுப்ப முடியும்.

3. நல்லிணக்கத்தின் தேவை நாம் கொண்டுள்ள இந்த மத ஒற்றுமை உலகநாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமையட்டும். இறுதியாக, "யுத்தம் புனிதமானது அல்ல. அமைதியே புனிதமானது." (Peace is holy, not war) என்ற திருத்தந்தையின் போதனைக்கிணங்க அகிலமெங்கும் சாந்தி நிலவவும், மனிதநேயம் தழைக்கவும், இறைவனை வேண்டுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.      

உலகளவில் வெடிக்கும் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக வெளியான அறிக்கை | Statement Issued Against Violent Incidents

மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US