அக்குரேகொட இரட்டைக் கொலை! இராணுவ முகாம்களால் பாதாள உலகத்திற்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் - அமைச்சர் தகவல்

Parliament of Sri Lanka Sajith Premadasa Crime Branch Criminal Investigation Department Ananda Wijepala
By Dhayani Feb 17, 2026 03:20 PM GMT
Report

சமீபத்தில் அக்குரேகொடவில் வழக்கறிஞர் புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட பகுதி உயர் பாதுகாப்பு வலயம் அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (17) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களுக்கும் அமைச்சர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல்

நாட்டை உலுக்கிய இரட்டை கொலை! சந்தேகநபர்களின் வாக்குமூலத்தில் வெளியான இரகசிய தகவல்

தேசிய பாதுகாப்பின் தாக்கம்

இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை என்றும் தேசிய பாதுகாப்பில் எந்த தாக்கமும் இல்லை என்றும், இந்த சம்பவத்தால் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அக்குரேகொட இரட்டைக் கொலை! இராணுவ முகாம்களால் பாதாள உலகத்திற்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் - அமைச்சர் தகவல் | Statement Ananda Vijaypala Akuregoda Murter

இந்த கொலையை ஒருபோதும் சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாகக் கருதக்கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

"இந்த நாட்டில் யாருடைய உயிரையும் நாங்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை. யாருடைய கைகளாலும் யாரும் இறப்பதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை.ஒரு அரசாங்கமாக, அனைவரின் உயிரையும் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

புழக்கத்தில் ஏராளமான ஆயுதங்கள்

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சமூகத்தில் ஏராளமான ஆயுதங்கள் புழக்கத்தில் உள்ளன.

அக்குரேகொட இரட்டைக் கொலை! இராணுவ முகாம்களால் பாதாள உலகத்திற்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் - அமைச்சர் தகவல் | Statement Ananda Vijaypala Akuregoda Murter

கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் நான் பணியாற்றி வருகிறேன்.

மேலும், சில இராணுவ முகாம்களால் பாதாள உலகத்திற்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் சூழலில் இதுபோன்ற கொலைகள் நடைபெறுகின்றன.

இவ்வாறான கொலை கலாச்சாரத்தை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும் எங்கள் வருத்தத்தை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்." என்றும் தெரிவித்துள்ளார்.

பதவி விலகப்போவதில்லை..! ஐ.தே.க.வுக்கு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலடி

பதவி விலகப்போவதில்லை..! ஐ.தே.க.வுக்கு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலடி

சர்வதேச சந்தையில் அதிரடி மாற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை! இலங்கை நிலவரம்

சர்வதேச சந்தையில் அதிரடி மாற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை! இலங்கை நிலவரம்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US