பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக கொண்டுவரப்படும் கூட்டு அறிக்கை (Video)
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கூட்டு அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய புத்தகசாலையில் இன்று (09) குறித்த கூட்டு அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிக்குகள், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் என பலரும் கலந்து கொண்டு கூட்டு அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.
பயங்கரவாத தடை சட்டம்
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள தடுத்து வைத்தல் உத்தரவு உடனடியாக மீளப்பெறப்படுவதோடு, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூட்டு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
அவ் அறிக்கை ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறிய ஜனநாயக விரோத பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள போராட்ட செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் அத்துமீறி நுழைந்து கடத்தவும் மற்றும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” எனும் கோரிக்கைகளையும் முன்வைத்து கூட்டு அறிக்கை கையொப்பமிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.