யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அரச வெசாக் விழா
அரச வெசாக் விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு வெசாக் பண்டிகையின் போது வடக்கு கிழக்கிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் நாகதீப ரஜ மஹா விஹாரையில் இம்முறை அரச வெசாக் பண்டிகை அனுஷ்டிக்கப்பட உள்ளது. வடக்கு கிழக்கில் காணப்படும் 65 விஹாரைகள் மற்றும் 35 ஐந்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளும் இணைந்து இந்த அரச வெசாக் பண்டிகையை ஏற்பாடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களங்களும் இந்த ஏற்பாடுகளில் பங்களிப்பினை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் நோய்த் தொற்று பரவுகை காரணமாக கடந்த ஆண்டு வெசாக் பண்டிகை ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் மே மாதம் வெசாக் பண்டிகை அனுஸ்டானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
