நிதி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
இந்த வருடத்தின் முதல் காலாண்டின் அரச வருமானமானது எதிர்பார்க்கப்பட்ட அளவை விட 6 வீதம் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25.04.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "2024இன் அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
பணப்புழக்க முகாமைத்துவம்
இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6 வீத வளர்ச்சியாகும்.
நாட்டின் முறையான நிதி முகாமைத்துவம் மற்றும் வருமான முறைமையை பார்க்கும் போது, 2024ஆம் ஆண்டு வருமான இலக்குகளை எட்டக்கூடிய ஆண்டாக அமையும்.
மேலும், இந்த ஆண்டு பணப்புழக்கத்தை முகாமைத்துவம் செய்வதில் திறைசேரி கடும் சவாலை எதிர்கொள்கிறது.
தற்போதைய சட்டத்தின்படி கடன் பெறவும், பணத்தை அச்சிடவும் முடியாமலிருப்பதே அதற்கு காரணமாகும்.
அதேவேளை, நலன்புரி மற்றும் மீள்கட்டமைப்புச் செயற்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும், நாட்டில் சரியான முறையில் நிதி நிர்வாகம் செய்யப்படுகிறது" என சுட்டிக்காட்டியுள்ளார்.



வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
