வியாழேந்திரன், அரவிந்குமார், சுரேன் ராகவனுக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சு
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி அரசமைக்கும் முயற்சி தோல்வி கண்டுள்ளதால், அடுத்த வாரத்துக்குள் இராஜாங்க அமைச்சுகளின் நியமனம் இடம்பெறவுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயார் நிலையில் இருக்குமாறு அறிவிப்பு
பதவியேற்பதற்குத் தயார் நிலையிலேயே இருக்குமாறு ஏற்கனவே இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
35 முதல் 40 பேருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.

வியாழேந்திரன், அரவிந்குமார், சுரேன் ராகவன் ஆகியோர் இராஜாங்க அமைச்சுப் பட்டியலில் இடம்பிடித்துள்ள தமிழ் உறுப்பினர்களாவர் எனத் தெரியவந்துள்ளது.
அமைச்சரவை நியமனம்
இராஜாங்க அமைச்சர்களின் நியமனத்தின் பின்னரே, நிலையான அமைச்சரவை நியமனம்
இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam