மைத்திரியை எதிர்க்கும் ராஜாங்க அமைச்சர்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தற்போதைய அரசாங்கத்துடன் இணைத்துக்கொண்டமை குறித்து தான் அன்றும் இன்றும் எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார்.
''நாடு தற்போது விழுந்துள்ள நிலைமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) உட்பட அந்த கட்சியின் அணியினர் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரணசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
தவறவிட்ட பொறுப்புகளில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் மீள முடியாது. அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்துள்ள சகோதர கட்சிகள் முன்வைக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ள தயார்.
எனினும் அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்ட சூழ்ச்சிகளை செய்வார்கள் என்றால், அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம்'' எனவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
