பொதுஜன பெரமுன இனவாத கட்சியல்ல - ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த வகையிலும் இனவாத கட்சி அல்ல எனவும் சிலர், அதனை இனவாத பக்கத்திற்கு இழுத்து செல்ல முயற்சிப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இனவாத கட்சியல்ல. சிலர் இனவாத பக்கம் எம்மை இழுத்துச் செல்ல பார்க்கின்றனர்.
நாங்கள் இனவாத கட்சியல்ல என்பதை தெளிவாக கூறுகின்றேன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து இனங்களுடன் வேலை செய்யும் கட்சி. அனைத்து மதங்களுடன் இணைந்து பணியாற்றும் கட்சி. சில கட்சிகள் அவர்களின் கொள்கைளை நடைமுறைப்படுத்த ஓடுகின்றன.
அது அவர்களின் ஜனநாயக உரிமை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து இலங்கை மக்களினதும் கட்சி. நாங்கள், இன, மத, கட்சி பேதங்களை பார்ப்பதில்லை. ஐ.தே.கட்சியா, சுதந்திரக்கட்சியா, மொட்டுக் கட்சியா என்பதை பார்ப்பதில்லை.
நாங்கள் நாட்டை அனைவருக்காகவும் முன்னேற்றவும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த பார்க்கின்றோம். நாங்கள் மிக விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம். அதற்காக சட்டத்திருத்தம் செய்ய நாடாளுமன்றத்திற்கு சட்டமூலங்களை கொண்டு வருவோம்.
மாகாண சபைகளை ஒழிப்பதற்கு வழியில்லை. மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தி, மக்களுக்கு சர்வஜன வாக்குரிமையை வழங்குவோம் எனவும் நிமல் லங்சா குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
