அரச இலக்கிய விருது வழங்கும் விழா-தமிழருக்கு சாகித்திய ரத்னா விருது

Ranil Wickremesinghe Vidura Wickramanayaka Sri Lanka
By Steephen Oct 29, 2022 04:23 AM GMT
Report

இலக்கியத்தில் சிறந்து விளங்கும் இலங்கை எழுத்தாளர்களை கௌரவிப்பதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 2022 அரச இலக்கிய விருது வழங்கும் விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (28) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அரச இலக்கிய விருது வழங்கும் விழா-தமிழருக்கு சாகித்திய ரத்னா விருது | State Literary Award Sahitya Ratna Award For Tamil

அரச இலக்கிய ஆலோசனை சபை, இலங்கை கலைப் பேரவை, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 65ஆவது அரச இலக்கிய விருது விழாவில் 40 “அரச இலக்கிய விருதுகளும்” 03 “சாகித்ய ரத்ன” விருதுகளும் வழங்கப்பட்டன.

வாழ்நாளில் ஒரு முறை மட்டும் ஜனாதிபதியால் வழங்கப்படும் சாகித்திய ரத்னா விருது

அரச இலக்கிய விருது வழங்கும் விழா-தமிழருக்கு சாகித்திய ரத்னா விருது | State Literary Award Sahitya Ratna Award For Tamil அரச இலக்கிய விருது வழங்கும் விழா-தமிழருக்கு சாகித்திய ரத்னா விருது | State Literary Award Sahitya Ratna Award For Tamilஅரச இலக்கிய விருது வழங்கும் விழா-தமிழருக்கு சாகித்திய ரத்னா விருது | State Literary Award Sahitya Ratna Award For Tamil

பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுரு (சிங்களம்), சிரேஷ்ட பேராசிரியர் கமனி ஜயசேகர (ஆங்கிலம்) மற்றும் டீ .ஞானசேகரன் (தமிழ் ) ஆகியோர், ஒரு கலைஞருக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே ஜனாதிபதியினால் வழங்கப்படும் சாகித்திய ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அரச இலக்கிய விருது வழங்கும் விழா-தமிழருக்கு சாகித்திய ரத்னா விருது | State Literary Award Sahitya Ratna Award For Tamil

எரிக் இளையப்ஆரச்சியின் "நகுல முனி" நாவலும் (சிங்களம்), பிரேமினி அமரசிங்கவின் "Footprints" (ஆங்கிலம்) மற்றும் சிவலிங்கம் ஆரூரன் எழுதிய "ஆதுரசாலை" (தமிழ்) நாவலும் சிறந்த நாவல்களாக விருது பெற்றன.

2022ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது விழாவுக்காக வெளியிடப்பட்ட நினைவுப் பதிப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அரச இலக்கிய விருது வழங்கும் விழா-தமிழருக்கு சாகித்திய ரத்னா விருது | State Literary Award Sahitya Ratna Award For Tamil

இந்த நிகழ்வில், அரச இலக்கிய சபையின் தலைவர் ரம்புக்கண சித்தார்த்த தேரர், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, கலாசார அலுவல்கள் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே ஆகியோருடன், பேராசிரியர் ஜே.பி. திசாநாயக்க, பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US