அரசாங்கத்தின் வருமானம் 25 வீதத்தினால் அதிகரிப்பு
கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தின் வருமானம் 25 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு வருமானம் அதிகரித்துள்ளது.
219 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 274 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம்
மேலும், சுங்கத் திணைக்களத்தின் வருமானம் 11 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும்,மதுவரித் திணைக்களத்தின் வருமானமும் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம் 114 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனவே அரசாங்க வருமான அதிகரிப்பானது நாட்டு பிரஜைகளின் நலனை மேம்படுத்தும் என அமைச்சர் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
