எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ள அரச எரிபொருள் நிறுவனம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 77 ரூபாவாலும் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 76 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் டீசலின் விலை 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்புக்கு அமைய ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 254 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 283 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் டீசல் 176 ரூபாய் அதிகரித்துள்ளதுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 254 ரூபாவாக அதிகரித்துள்ளது. மண் எண்ணெயின் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam