கோவிட் தொடர்பான அரச சுற்றறிக்கையை மீறி வவுனியாவில் அரச நிகழ்வு

Srilanka Covid Vavniya
By Thileepan May 04, 2021 06:06 PM GMT
Report

கோவிட் தொடர்பான அரசாங்கத்தின் சுற்றறிக்கைகளை மீறி வவுனியாவில் அரச அதிகாரிகளால் மக்களைத் திரட்டி நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட்  தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார பிரிவினராலும், அரசாங்கத்தாலும் கோவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த விசேட அறிக்கைகள், சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன் வட மாகாண ஆளுனரும் வடக்கு மாகாணத்தில் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

குறித்த சுற்றறிக்கைகளுக்கு அமைவாக பாடசாலைகள், பல்கலைக்கழங்கள், மேலதிக வகுப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அரச தனியார் நிறுவனங்கள் 25 வீத உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச நிகழ்வுகள், விழாக்கள், ஒன்று கூடல்கள், திருமண வைபவங்கள், மக்கள் கலந்து கொள்ளும் விசேட நிகழ்வுகள், வீடுகளில் இடம்பெறும் விருந்துபசாரங்கள் என்பன மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில் அரச அதிகாரிகள் சிலர் இதனை கண்டு கொள்ளாத நிலை காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்தவகையில், வவுனியா, புதிய மணிபுரம் கிராமத்தில் உள்ள பொது நோக்கு மண்டபத்தில் 'மாதிரி கிராம அங்குராப்பண' நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இதில் 75 பேர் வரையிலானவர்கள் கலந்து கொண்டதுடன், சிலர் முககவசங்களை அணியாமலும், சிலர் முக கவசங்களை சீராக அணியாமலும் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் முன்மாதிரியாக இருக்க வேண்டிய நிலையில் அரச சுற்றறிக்கைகளை மீறி நடைபெறும் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்தி, மாவட்டத்தில் கோவிட்  தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US