அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் கைது
அரச பொறியியல் கூட்டுத்தாபத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹாரா விஜேதாச கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசுப் பொருட்கள் மற்றும் பணியாளர்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் மேற்கொள்ளப்பட்ட பழுது பார்க்கும் பணிகளுக்காக, அரசுக்குச் சொந்தமான உபகரணங்கள், பொருட்கள் மற்றும் பணியாளர்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக தில்ஹாரா விஜேதாச மீத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
விஜேதாசா சட்டபூர்வ அனுமதி பெற்றுக்கொள்ளாது அல்லது நடைமுறைகள் மீறி அரசுப் பணியாளர்களை சிரிகொத்த பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam