நுவரெலியாவிலும் அரச வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
நுவரெலியாவில் இயங்கும் அரச வங்கி ஊழியர்கள் இணைந்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக அரச வங்கிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் (12) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
இதில் முதன்மை கோரிக்கையாக அரச வங்கிகளில் 1996ஆம் ஆண்டுக்கு பின் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரி, ஏனைய அரச ஊழியர்கள் போல் தமக்கு அனைத்து சலுகைகளும் பெற்று தாரக்கோரியும் மதிய நேர உணவு இடைவேளையில் 12.30 மணிமுதல் 1.30 வரை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது அரச வங்கி எதிர்நோக்கும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுக்க்பபட்டுள்ள எச்சரிக்கை
தங்கள் கோரிக்கைகள் எதிர்வரும் நாட்களில் முறையாக தீர்க்கப்படாவிட்டால் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்துள்ளனர்.








நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்



