இலங்கையில் ஸ்டார்லிங் இணைய சேவைக்கான கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல்
எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையச்சேவை இலங்கையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் இணைப்புக் கட்டணங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.
குடியிருப்பு மற்றும் வணிக பயனர்கள் என்ற இரண்டு பிரிவுகளில் இந்த கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குடியிருப்பு லைட் திட்டத்திற்கு மாதத்துக்கு 12,000 ஆயிரம் ரூபாய் அறவிடப்படும். குடியிருப்புத் திட்டத்திற்கு மாதத்துக்கு 15,000 ரூபாய் அறவிடப்படும்.
ஸ்டாண்டர்ட் கிட்
அதேநேரம், இந்த சேவைக்கான ஸ்டார்லிங்க் ஸ்டாண்டர்ட் கிட் என்ற வன்பொருளுக்கு 118,000 ஆயிரம் ரூபாய் அறிவிடப்படவுள்ளது.
இதனை தவிர வணிகத்திட்டத்தின்படி, 24 ஆயிரம் ரூபாய், 64ஆயிரம், ரூபாய், மற்றும் 127ஆயிரம் என்ற மாதாந்த கட்டணங்களும், அதற்கான வன்பொருளுக்கு 9 இலட்சம் ரூபாயும் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |