ஹிங்குராக்கொடை விமானப்படைத் தளத்தில் சர்வதேச தரத்திலான ஓடுபாதை
ஹிங்குராக்கொடை விமானப்படைத்தளத்தில் சர்வதேச தரத்திலான ஓடுபாதையொன்று நிர்மாணிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
சுமார் 2.5 கிலோ மீற்றர்(2500 மீற்றர்கள்) தூரம் கொண்டதாக இந்த விமான ஓடுபாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.
தற்போதைக்கு இதன் நிர்மாணப் பணிகளில் 850 மீற்றர்கள் வரையான நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
நிர்மாணப் பணிகள்
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச அண்மையில் இதன் நிர்மாணப் பணிகளை ஆராயும் வகையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
வை-12 விமானமொன்றை அவரே செலுத்தி வந்து குறித்த ஓடுபாதையில் தரையிறக்கி பரீட்சித்திருந்தார்.
விமான ஓடுதளத்தின் நிர்மாணப் பணிகளை இலங்கை விமானப்படை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபை என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |