அவசரகால சட்டம் தொடர்பில் சுயாதீன அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு
அவசரகால சட்டத்தை ஆதரிப்பதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள 10 சுயாதீன அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
நாடாளுமன்றில் இன்று(27) இடம்பெறும் விவாதத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற சுயேச்சை கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தை தொடர்ந்து, அவசரகால சட்ட பிரகடனத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பொது பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை விவாதிப்பதற்காக இன்று முற்பகல் 10.00 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது.
அவசரகால சட்டத்திற்கு ஆதரவு
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்கும் சூழ்நிலையை, கண்கூடாகக் காண முடிகிறது. அதே சமயம் ஜனநாயகம் ஒழிக்கப்படுகிறது.
போராட்டம் மற்றும் ஜனநாயக சுதந்திரம் என்று சொல்லப்படுவதால் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. எனவே நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான அதிகாரங்கள் பாதுகாப்பு படையினரிடம் வழங்கப்பட வேண்டும். அதனால் தான் அதற்கு ஆதரவளிக்கின்றோம்.
இதேவேளை, வன்முறை போக்கு நாட்டில் தொடரும் பட்சத்தில் ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம். எனவே நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்”என தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு
இதேவேளை அவசர காலச்சட்ட நீடிப்பை தாம் எதிர்க்கப்போவதாக ஐக்கிய மக்கள்
சக்தி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.