இந்திய கடற்தொழிலாளர்கள் மீது தாக்குதல்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் வார்த்தையில் கடிதம் எழுதியுள்ளதாக செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை இலங்கைக்கு எடுத்துக்கூறி தாக்குதல்களை நிறுத்துமாறு அவர் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (23.02.2023) 6 இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்தே இந்த கடிதத்தை அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ளார்.

இந்திய கடற்தொழிலாளர்கள் தாக்கப்பட்டமை
கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 கடற்றொழிலாளர்கள், பெப்ரவரி 21ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற நிலையில், நேற்று 23ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாக இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை கடற்படையினர் தரப்பில்
இருந்து இன்னும் தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan