மோடியின் எதிர்பார்ப்புக்களை தகர்தெறிந்த இந்திய தேர்தல் முடிவு
இந்திய தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடி தரப்பின் எதிர்பார்ப்புக்களை தகர்தெறிந்திருந்துள்ள நிலையில், தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதலமைச்சர் எம். கே ஸ்டாலின்(M. K. Stalin) சந்தித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே ஸ்டாலின் இதனை கூறியுள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “டெல்லி விமான நிலையத்தில், வைத்து சந்திரபாபு நாயுடுவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தேன்.
உரிமை பாதுகாப்பு
சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன்.
அவர் மத்திய அரசில் முக்கியப் பங்காற்றுவார். தென் மாநிலங்களுக்காக வாதிடுவார். நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடி தரப்புக்கு வெற்றியை வழங்கியிருந்தாலும் அவர்களின் தேர்தல் எதிர்பார்ப்புக்களை தகர்தெறிந்திருந்தது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தது.
Met Thiru @ncbn garu, a longtime friend of Thalaivar Kalaignar, at Delhi Airport. I conveyed my best wishes to him and expressed hope that we will collaborate to strengthen the ties between the brotherly states of Tamil Nadu and Andhra Pradesh. I am confident that he will play a… pic.twitter.com/IElYek4hQi
— M.K.Stalin (@mkstalin) June 5, 2024
நரேந்திர மோடி
குறித்த பேச்சுவார்த்தையின் முடிவில் 3ஆவது முறையாக பிரதமராகும் நிலையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
எனினும் மோடி தரப்பின் திட்டங்களை புறக்கணிக்கும் தமிழ்நாட்டின் திமுக கட்சியானது சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளமையானது அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது.
With my beloved brother of #INDIA @RahulGandhi ❤️ #BrotherGoals pic.twitter.com/5kLitThwIn
— M.K.Stalin (@mkstalin) June 5, 2024
மற்றுமொரு டுவிட்டர் பதிவில் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் காந்தியை குறிப்பிட்டு ''எனது அன்புக்குரிய சகோதரர்'' எனவும் கூறியுள்ளார்.
இதற்கமைய மோடி தரப்புடன் கூட்டணியை அமைக்கும் தெலுங்கு தேச கட்சியானது, ஸ்டார்லின் தரப்புடன் எவ்வாறான விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கும் என்ற கேள்விகளும் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தையின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சந்திரபாபு நாயுடு மீண்டும் 7 ஆம் திகதி டெல்லிக்கு வருவேன் கடும் தொனியில் என கூறி சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |