இலங்கையர்களால் தாக்கப்படும் தமிழக கடற்றொழிலாளர்கள்: தடுத்துநிறுத்த ஸ்டாலின் கடிதம்
தமிழக கடற்றொழிலாளர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையை சேர்ந்தவர்களால் தமிழக கடற்றொழிலார்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றனர். இதனை தடுத்துநிறுத்த வேண்டும் என்று ஜெய்சங்கரிடம் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.

கடுமையாக பாதிக்கப்படும் வாழ்வாதாரம்
தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், (2023 21.08) ஆம் திகதி மட்டும் ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஸ்டாலின் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், உரிய தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுடன்
தொடர்புகொண்டு, தமிழக கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திட
வேண்டுமென்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுள்ளார்.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam