இந்திய கடற்தொழிலாளர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் கோரிக்கை
இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்தொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த அக்டோபர் 27ஆம் திகதி தமிழகத்தைச் சேர்ந்த 7 கடற்தொழிலாளர்கள் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தமிழக கடற்தொழில் 98 விசைப்படகுகள் இலங்கைக் காவலில் இருப்பதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழக கடற்தொழிலாளர்களின் பாரம்பரிய கடற்தொழில் உரிமையைப் பாதுகாப்பதில் தமிழக அரசாங்கம் உறுதியாகவுள்ளது.
கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
பாக்கு நீரிணைப் பகுதியில் கடற்தொழிலாளர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது இந்திய கடற்தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு தொடர்ச்சியான அச்சுறுத்தலாக உள்ளது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
எனவே தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்பகுதியில் இருந்துதொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்ய வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் வேண்டும் என்ற தனது ஆலோசனையை, அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கமைய ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உள்துறை அமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் கூட்டத்தில் தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தனது உரையில் இந்தியா இலங்கை கடற்தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து கருத்துரைத்துள்ளார்.
இந்திய அரசாங்க நடவடிக்கைகள்
இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டது, இலங்கைக்கு சொந்தமான பகுதியில் அல்ல என்றும் கூறியுள்ளார். எனினும் இலங்கை கடற்படை அவர்களை சுற்றி வளைத்து, தமிழக கடற்தொழில் இலங்கை பகுதிக்குள் தள்ளி பின்னரே அவர்களை கைது செய்தது.
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக அரசின்
நிலைப்பாட்டை வலியுறுத்திய ஸ்டாலின் கடற்தொழில் பிரச்சினை மற்றும் இதர
பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் கச்சத்தீவை மீட்க தேவையான
நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் தேவைப்பட்டால், இதற்காக சர்வதேச
நீதிமன்றத்தையும் அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
