நாமலின் சொத்துக் குவிப்பு விவகாரம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது சொத்துக்கள் தொடர்பான முழுமையான விபரங்களை அறிவிக்காமல் இருந்தால் எதிர்காலத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(18.09.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் உள்ள அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரிடம் தங்கள் சொத்து விபரங்களை ஒப்படைக்க வேண்டும்.
ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவர் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர், தங்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்துள்ளனர். நாமல் ராஜபக்ச சமர்ப்பித்த சொத்து விபரங்கள், போலியானதாக இருக்கலாம் என பலர் கருதுகின்றனர்.
அவ்வாறு போலியான சொத்து விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பின் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
