லண்டனில் கத்திக் குத்து தாக்குதல் - இளைஞர் பரிதாபமாக பலி
தென்மேற்கு லண்டனில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 24 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 13ம் திகதி உள்ளூர் நேரப்படி 20.20 மணிக்கு கிங்ஸ்டன்-அபான்-தேம்ஸில் உள்ள ஃபேர்ஃபீல்ட் சாலைக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதவி பெறுவதற்காக பப்பிற்குச் சென்ற இளைஞர்
சம்பவ இடத்திற்கு துணை மருத்துவர்கள் மற்றும் லண்டன் ஏர் ஆம்புலன்ஸ் சேவையும் அழைக்கப்பட்டதாகவும், எனினும், குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
தாக்குதலுக்குப் பிறகு உதவி பெறுவதற்காக அவர் ஒரு பப்பிற்குச் சென்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் ஃபேர்ஃபீல்ட் சாலையில் தாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் முறையாக அடையாளம் காணப்படவில்லை எனவும், அவரது நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
