இலங்கைக்குள் உள்நுழைய தயாராகும் மற்றுமொரு இந்திய நிறுவனம்
இந்தியாவின் தமிழக எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கைக்கு சிமெந்து ஏற்றுமதி செய்யும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த ஏற்றுமதி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வி, மருத்துவம், ஹோட்டல் என்று பல்வேறு தொழில் துறைகளில் முன்னணியில் திகழும், தமிழக எஸ்.ஆர்.எம். குழுமம் தனது வர்த்தகத்தை மேலும் பல துறைகளில் விரிவுப்படுத்த தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தற்போது சிமெந்து உற்பத்தி துறையில் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்காக, 225 கோடி முதலீட்டில் எஸ்.ஆர்.எம்.பி. சிமெண்ட்ஸ் நிறுவனம் என்ற புதிய நிறுவனத்தை எஸ்.ஆர்.எம். குழுமம் ஆரம்பித்துள்ளது.
பல நாடுகளுக்கு ஏற்றுமதி
இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்தநிலையில் நவம்பர் 15 முதல் இலங்கை, மாலைத்தீவு, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு எஸ்ஆர்எம் நிறுவனம், தமது சீமெந்து ஏற்றுமதியை ஆரம்பிக்கவுள்ளது.
இந்தநிலையில் நிறுவனம் தமிழ்நாட்டில் 3 ஆலைகளையும், ஆந்திராவில் ஒரு ஆலையையும் கொண்டுள்ளது.
இந்த ஆலைகளின் ஆண்டு உற்பத்தி திறன் 4.20 இலட்சம் டன்னாகும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இதனை 1 கோடி டன்னாக அதிகரிக்க, நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.