சம்பளங்களை கொடுப்பதற்கு தாள்களை அச்சிடும் அரசாங்கம்! சிறீதரன் பகிரங்கம் (Video)
சம்பளங்களை கொடுப்பதற்கு தாள்களை அச்சிட்டு வழங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கத்திடம், தன்னுடைய கடன்களை வழங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்திடம் நாங்கள் இப்போது அபிவிருத்தி பற்றி பேசுவதிலே எந்த பலனும் இருப்பதாக தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உண்மையான பௌத்த மதத்தை நேசிக்கின்ற, புத்த பகவானை வணங்குகின்ற நீதியான சிங்களத் தலைவர்கள் இருக்கின்றார்கள். சிங்கள அதிகாரிகள் இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு நியமனம் கொடுங்கள். மனசாட்சியின் படி இருக்கும் இவ்வாறானவர்களை நியமித்து இந்த நாட்டை எவ்வாறு கொண்டு செல்வது என்பது பற்றி சிந்தியுங்கள்.
அது தான் நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய காரியமாக மாறும் என அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan