சுமந்திரன் இல்லாமல் கட்சி சோபிக்காதா! சிறீதரன் விளக்கம்
தான் இல்லாவிட்டாலும் சுமந்திரன் இல்லாவிட்டாலும் தமிழ் மக்களும் தமிழரசுக் கட்சியும் முன்னோக்கி செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இல்லாமல் தமிழரசுக் கட்சி சோபிக்காது என அவரின் ஆதரவாளர்கள் கூறுவதை ஏற்க முடியாது.
உலகம் எப்போதும் தனி ஒருவரை நம்பி இல்லை. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பதவியிலிருந்து சென்றவுடன் அமெரிக்கா அந்த இடத்திலேயே நிற்கவில்லை.
எனவே, சுமந்திரன் அல்லது சிறீதரன் என தனி நபர் ஒருவரை ஒரு இனத்தின் அடையாளமாக எப்போதும் கூற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 21 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan