தமிழர்களின் படுகொலைக்கு டக்ளஸும் உடந்தை..! சபையில் அம்பலப்படுத்திய சிறீதரன்
60இற்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் கொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடந்தையாக இருந்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(17.06.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மண்டைதீவு, மன்கும்பான் மற்றும் அல்லைப்பிட்டி கொலைகள் மற்றும் புதைகுழி விவகாரம் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
மண்டைதீவு, மன்கும்பான் மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளுக்கு மக்கள் அழைத்து செல்லப்பட்ட போது, இராணுவத்தின் துணை ஆயுத குழுவாக இருந்த டக்ளசிடம் மக்கள் முறையிட்டனர்.
ஆனால், டக்ளஸ் அதனை பொருட்படுத்தாததால் அங்கு மக்கள் கொன்று புதைக்கப்பட்டனர். எனவே, இது தொடர்பில் டக்ளசிடமும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam