இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தும் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்: சிறீதரன் அழைப்பு
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில், தியாகச் சாவைத் தழுவிக்கொண்ட முதல் மனிதன் என்னும் மரியாதைக்குரியவர் திருமலை நடராஜன் ஆவார்.
எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கையில் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது..! வெளியானது அறிவிப்பு
அங்கீகரிக்கப்படாத இறைமை
அவர், 1957.02.04ஆம் திகதியன்று நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்து, திருமலையில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக்கொடியை ஏற்றியமைக்காக சிங்களப் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
அன்றிலிருந்து, 67 வருடங்கள் கடந்தும், இந்த நாட்டில் தமிழர்களின் இறைமை இன்றளவும் அங்கீகரிக்கப்படவில்லை.” என்றுள்ளது.
தொடர்ந்தும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |