விமான நிலையத்தில் சிறீதரனுக்கு அநீதி இழைப்பு! விரிவான விசாரணைக்கு வலியுறுத்தும் ஹக்கீம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு விமான நிலையத்தில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem) வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(21) உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
விரிவான விசாரணை
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் நானும் அங்கு இருந்தேன். குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் அவருக்கு எதிராக பயணத் தடை உள்ளது என்று கூறினர்.
அதனைத் தொடர்ந்து கலந்துரையாடி நாம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தோம். இத்தகைய விடயங்கள் காணப்படின் நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம். ஆனால் அதிகாரிகள், அவருடைய நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
அரசு இன்னமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு இந்த விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |