சிறீதரனுக்கு காத்திருக்கும் ஆபத்து
தனக்கு 2 வருடங்களாக மெய்பாதுகாவலராக இருந்தவர் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக உயர் பொலிஸ் அதிகாரிக்கு கடிதம் எழுதிய நிலையில் அதற்கு பதில் கிடைக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்(S.Shritharan)நாடாளுமன்றில் நேற்றையதினம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்த மாற்றத்திற்கு பின்னால் சில காரணங்களும் சதிகளும் இருக்கலாம் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், சிறீதரன் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தனக்கு நீதி வேண்டி யாழ். மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்றவர் என்ற அடிப்படையில் மக்களை திரட்டி போராட்டமொன்றை மேற்கொள்ள முடியும் என்றும் திபாகரன் இதன்போது தெரிவித்தார்.
அல்லது சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் இந்த விடயங்கள் எதையும் செய்யாமல் அவர் இவ்வாறான சதி நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க முடியதென்றும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |